கார் – இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்.. தூக்கி வீசப்பட்ட 2 பேர் பலி..!

Author: kavin kumar
7 November 2021, 7:30 pm
Quick Share

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம், மதுரை ஏர்போர்ட், பெருங்குடி பகுதியைச் சேர்ந்த காமு என்ற காமராஜ் வயது 21. அஜித் கண்ணன் வயது 21. மற்றும் இவரது நண்பர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 5ஆம் தேதி சேர்ந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து கொடைக்கானலில் இரண்டு தினங்கள் சுற்றிவிட்டு மீண்டும் கொடைக்கானலில் இருந்து மதுரை நோக்கி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்துள்ள சிலுக்குவார்பட்டி சிவன்கோயில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து பண்ணைக்காடு நோக்கி சென்ற ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது படுவேகமாக மோதியது.

இதில் அஜித் கண்ணன் சினிமா பட சம்பவம் போல் மோட்டார் சைக்கிளிலிருந்து சுமார் 10 அடி உயரம் பறந்து சாலையின் குறுக்கே சென்ற மின்கம்பியில் தொங்கினார். அதேபோன்று காமு என்ற காமராஜ் அப்பகுதியில் காட்டுப் பகுதியில் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேரும் பரிதாபமாக இறந்து போனார். மின்கம்பத்தில் தொங்கிக்கொண்டிருந்த வரை இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைமையில் போலீசார்கள் விரைந்து சென்று இரண்டுபேர் உடல்களையும் மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக வைத்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 457

0

0