120 அடி கிணற்றில் பாய்ந்த கார் : 7 மணி நேர போராட்டத்திற்கு பின் கல்லூரி மாணவர்கள் சடலம் மீட்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
9 September 2022, 1:15 pm

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த ரோஷன்(வயது 18) தனது நண்பர்களுடன் நேற்று சிறுவாணி சாலையில் உள்ள தனியார் கிளப்பில் ஓணம் பண்டிகையை கொண்டாடிவிட்டு இன்று அதிகாலை காரில் (Suzuki Iszusu) நண்பர்களுடன் வந்து கொண்டிருக்கும் போது, தென்னமநல்லூர் பகுதியில் வளைவில் திருப்பும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் மாரப்ப கவுண்டர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் இரும்பு கேட்டை உடைத்து கொண்டு சுமார் 120. அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்துள்ளது.

முன்னதாக இதில், காரை ஓட்டி வந்த ரோஷன் கதவை திறந்து வெளியே விழுந்து விட உடன் வந்த நண்பர்கள் ஆதர்ஷ் (வயது 18), விவேக்பாபு (வயது 18), நந்தனன் (வயது 18) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

அவர்கள் அனைவரும் கோவையில் வெவ்வேறு தனியார் கல்லூரியில் பயின்றவர்கள். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் காரையும் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களையும் மீட்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 7மணி நேரம் கழித்து அனைவரின் உடலையும தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டனர்.

  • shankar have no other films than indian 3 movie ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே