கோவை-டெல்லி வரை பார்சல் சேவை: கார்கோ எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கியது..!!

Author: Rajesh
14 May 2022, 6:01 pm

கோவை: முதன் முறையாக கோவையிலிருந்து டெல்லி பட்டேல் நகர் வரையிலான வாராந்திர கார்கோ எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவங்கப்பட்டது.

தென்னிந்தியாவின் மான்சிஸ்டர் என அழைக்கப்படும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள மாவட்டமாக கோவை உள்ளது.

குறிப்பாக தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து அதிகம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுகிறது.

அதே போல விவசாய விளைபொருட்கள், உணவு பொருட்கள் என அனைத்தும் ஏற்றுமதி செய்ய ஏதுவாக கோவை தெற்கு ரயில்வே கோவை முதல் தலை நகர் டெல்லி பட்டேல் நகர் வரை முதன் முறையாக வாராந்திர பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் இன்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ரேனி குண்டா ஆகிய வழிதடங்களில் பார்சல் ரயில் சேவை இயக்கப்படுகிறது. அதேபோல அடுத்த மாதத்திலிருந்து வாரம் இரண்டு முறை பார்சல் ரயில் இயக்கப்படும் என பார்சல் ஏஜென்ஸிஸ் அனில் பரேஜா மற்றும் ரயில்வே துறையினர் அறிவித்துள்ளனர்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!