பிரச்சாரத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக புகார். . பாஜக வேட்பாளர் பொன் பாலகணபதி மீது போலீசார் வழக்குப்பதிவு

Author: Babu Lakshmanan
5 April 2024, 4:23 pm

திருவள்ளூரில் தேர்தல் விதிமுறை மீறி பிரச்சாரத்தில் தேசியக்கொடி பயன்படுத்திய விவகாரத்தில் பாஜக வேட்பாளர் பொன்.வி பாலகணபதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் பாஜக வேட்பாளர் பொன் பாலகணபதி கடந்த 3ந் தேதி அன்று திருவள்ளூர் அடுத்த மெய்யூர் பகுதியில் தனது தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது, மெய்யூர் பகுதியில் அவரை வரவேற்பதற்காக பாஜக நிர்வாகிகள் ஒருங்கிணைப்பில் பாஜகவின் தாமரைக் கொடியும், ஒரு மூதாட்டியின் கையில் தேசியக்கொடியும் கொடுத்து பிடித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க: என்னையும் தான் அப்படி சொன்னாங்க… நான் ஒன்னும் அண்ணாமலையை பற்றி பேசலையே ; செல்லூர் ராஜு விளக்கம்..!!

அது தொடர்பாக செய்திகள் ஒளிபரப்பு செய்யப்பட்டதால் அதன் எதிரொலியாக தேர்தல் விதிமுறைகள் மீறி தேசியக்கொடியை வேட்பாளர் பிரச்சாரத்தில் பயன்படுத்தியதால், வேளகாபுரம் வருவாய் குறுவட்ட அலுவலர் பாலாஜி என்பவர் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

மேலும் படிக்க: நாடாளுமன்ற தேர்தலில் திமுக ‘டாப்’…. 2026 தேர்தலில் கலக்கப் போகும் விஜய் கட்சி ; வெளியானது கருத்துக்கணிப்பு..!!

அதன்பேரில், பெரியபாளையம் போலீசார் தேர்தல் விதிமுறையை மீறி பிரச்சாரத்தில் தேசியக்கொடி பயன்படுத்தியதால், பாஜக வேட்பாளர் பொன் வி பாலகணபதி, மாவட்டத் தலைவர் சீனிவாசன், பூண்டி ஒன்றிய தலைவர் சாந்தி, மற்றும் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 123(1) போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதற்கு சில நாட்கள் முன்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர் மொன்னவேடு கிராமத்தில் விநாயகர் கோவில் தரிசனம் செய்த போது, பெண் பூசாரிக்கு காணிக்கை இரண்டு 500 ரூபாய் தாள் கொண்ட 1000 ரூபாய் கொடுத்ததும் சர்ச்சையானது ஏற்படுத்தி இருந்தது. அதுமட்டுமின்றி அவர் பிரச்சாரத்தில் சென்றபோது, பீமன் தோப்பு கிராமத்தில் பெண்கள் வழிமறித்து தங்களுக்கு ஒன்றிய அரசு அளிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைக்கவில்லை என்று குமுறல் செய்திருந்தது.

இவர் கடந்த 2022ஆம் ஆண்டு பரமக்குடியில் உள்ள இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் முன்னாள் எம்பியும், பாஜக நிர்வாகியான சசிகலா புஷ்பாவிடம் தவறாக நடந்து கொண்டது போன்ற வீடியோ வைரலானதும் குறிப்பிடத்தக்கது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!