சென்னை அருகே டேங்கர் லாரி விபத்தால் கேஸ் திடீர் கசிவு ! துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்ப்பு!
6 February 2021, 8:22 pmQuick Share
சென்னை : பரனூர் சுங்கச்சாவடி அருகே சிலிண்டர் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி திடீர் விபத்துக்குள்ளானதில் கேஸ் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு சிலிண்டர் ஏற்றி சென்ற டேங்கர் லாரி விபத்துக்குள்ளானது.
கிரேன் மூலம் லாரியை மீட்கும் பணியின்போது டேங்கர் லாரியில் துளை விழுந்து கேஸ் வெளியேறுவதால் அப்பகுதியில் மிகுந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு வாகனங்கள் அப்பகுதிக்கு விரைகின்றன. இதனால் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Views: - 0
0
0