ஒரு வருஷமா நிலுவைத் தொகை பாக்கி.. கோவை மாநகராட்சிக்கு CCCA ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் வலியுறுத்தல்..!

Author: Vignesh
3 August 2024, 1:43 pm

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் 2024- 2025 ஆம் ஆண்டிற்கான பொது குழு கூட்டம் நேற்று முன் தினம் நடந்தது. சங்க தலைவர் உதயகுமார் செயலாளர் சந்திரபிரகாஷ் ஆகிய தலைமை வகித்தனர்.

மாநகராட்சி நிர்வாகத்தின் கணக்குகள் பிரிவில் ஒப்பந்ததாரர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள இஎம்டி எப்எஸ்டி மற்றும் நிறுத்தி வைத்த தொகையை வழங்க ஆணையர் உறுதி அளித்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மாநகராட்சியில், ஒப்பந்தம் இவருக்கு தான் என என்ட்ரி பிரீ பிக்சிங் செய்து டெண்டர் விடுவது தொடர்பாகவும், அதை மீறி டெண்டருக்கு விண்ணப்பித்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது தொடர்பாகவும், மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் அளிப்பது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த திட்ட பணிகள் முடிந்து. ஓராண்டிற்கும் மேலாக பல கோடி ரூபாய் பில் தொகை நிலுவையில் உள்ளது. சீனியாரிட்டி பட்டியல் படி இந்த பில் தொகை வழங்க வேண்டும். பட்ஜெட் பதிவேட்டில் வரவு விவரங்களை குறிப்பிடாமல் டெண்டர் விடுவதால் பட்ஜெட்டுக்கும் அதிகமாக டெண்டர் வைத்து பணிகள் நடத்தப்படுகின்றன. இது குறித்து புகார் அளிக்கப்படும் மத்திய பொதுப்பணித்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்ற துறைகளில் உள்ளதைப் போல ஒப்பந்ததாரர் லாபம் 10% சேர்த்து செட்டியூல் ஆஃப் ரேட் தயாரிக்க வேண்டும் என்பன உள்ளட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?