இரு பெண்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி பரபரப்பு..

6 November 2020, 8:52 am
Quick Share

கோவை:கோவையில் இரு பெண்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் இரு பெண்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் ஐ.டி.ஐ. அருகே கடந்த 2 ம் தேதி காலை 11 மணியளவில் பேருந்து நிறுத்ததில் மாநகர பேருந்து நின்று கொண்டு இருந்தது.

அப்போது கற்கள் ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று வேகமாக வந்துள்ளது. அப்போது இளைஞர் ஒருவர் இரு பெண்களுடன் பேருந்தை கடக்க முயன்ற அதே வேளையில் , மினிலாரியும் பேருந்தை கடந்தது. அப்போது பேருந்து, லாரி ஆகிய இரு வாகனங்களுக்கு இடையில் சிக்கிய இளைஞர் தடுமாறிய விழுந்த நிலையில், இரு இளம்பெண்கள் மீதும் கண் இமைக்கும் நேரத்தில் லாரி ஏறி இறங்கியது.

இதில் இளைஞர் சிறு காயங்களுடன் உயிர் தப்பிவிட, இரு இளம்பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த இரு பெண்களும் வடமாநிலத்தை சேர்ந்த சோனாலி முண்டா மற்றும் லட்சுமி ராணி மகோட்டா என்பதும் இவர்கள் தனியார் கம்பெனியில் டெய்லரிங் வேலை செய்துவருவதும் தெரியவந்தது. இந்த விபத்து ஏற்பட்ட போது அப்பகுதியில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது.

Views: - 19

0

0

1 thought on “இரு பெண்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி பரபரப்பு..

Comments are closed.