குற்றச் சம்பவங்களை தடுக்க ஒவ்வொரு தெருவிலும் சிசிடிவி : கோவை 15வது வார்டு பாஜக வேட்பாளர் வாக்குறுதி!!

Author: Udayachandran RadhaKrishnan
9 February 2022, 4:08 pm

கோவை : கோவை மாநகராட்சி 15 வது வார்டு பகுதிகளில், கண்காணிப்பு கேமரா வசதி மற்றும் அடிப்படை வசதிகளை செய்வதில் கவனம் செலுத்துவேன் என பா.ஜ.க.சார்பாக போட்டியிடும் வேட்பாளர் நளினி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் இம்முறை பா.ஜ.க.தனியாக தேர்தலை சந்திக்கிறது.

இதில்100 வார்டுகளை உள்ளடக்கிய கோவை மாநகராட்சியில் 15 வது வார்டில் பா.ஜ.க வேட்பாளராக நளினி போட்டியிடுகிறார். இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகளால் அடிப்படை தேவைகள் சரியான முறையில் வார்டுகளில் நிறைவேற்றப்படவில்லை என கூறிய அவர், தாம் வெற்றி பெற்றால் குற்றங்கள் குறைவதற்கு வார்டின் அனைத்து பகுதிளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு முயற்சி மேற்கொள்வேன் என கூறினார்.

குறிப்பாக மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை வார்டு மக்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்ப்பேன் என உறுதியளித்தார். பிரச்சாரத்தின் போது பா.ஜ.க.மாவட்ட பொது செயலாளர் S.R.தாமோதரன் உடனிருந்தார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?