பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் வீட்டில் திடீர் மரணம் : பிரபலங்கள் இரங்கல்!!

24 June 2021, 12:16 pm
Santhosh shivan- Updatenews360
Quick Share

கேரளா : தமிழ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவனின் தந்தை சிவன் மாரடைப்பால் காலமானார்.

சிவன் மலையாள திரையுலகில் பல திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். மேலும், மலையாளத்தில் யாகம், கொச்சு கொச்சு மோகங்கள் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மூன்று முறை தேசிய விருதும் வாங்கியுள்ளார்.

Image

89 வயதான இவர் மாரடைப்பால் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவரது மறைவுக்கு பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.

மேலும், அவரது மகன்கள் சங்கீத் சிவன், சந்தோஷ் சிவன், சஞ்சய் சிவன் ஆகிய மூவரும் திரைத்துறையில் பிரபலமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

அவரது மகள் சங்கீத் சிவன் தன் தந்தையின் புகைப்படங்களை ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு கூறியிருப்பதாவது, “நீங்கள் இல்லாத உலகை கற்பனை செய்து பார்க்கக் மிகவும் கடினமாக இருக்கிறது. இருப்பினும் நீங்கள் காட்டிய வழியில் நாங்கள் தொடர்ந்து செல்வோம். எப்பொழுதும் உங்களிற்கு கடமைப்பட்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Views: - 299

3

2