தனியார் நிறுவன ஊழியர்கள் குடியிருப்பில் செல்போன்கள் திருட்டு : வடமாநிலத்தவர் உள்ளிட்ட 4 பேர் கைது!!

18 July 2021, 11:43 am
Cell Phone Theft - Updatenews360
Quick Share

கோவை : சூலூர் அருகே செல்போன் திருடிய வடமாநில கொள்ளையர்கள் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள ஊழியர் குடியிருப்பில் தங்கி இருக்கும் 10 பேரின் செல்போன்கள் திடீரென காணாமல் போனது.

இதனையடுத்து அந்த குடியிருப்பில் வசித்து வரும் அகஸ்டின் என்பவர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் புகார் அளித்தார். இதையடுத்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்த வந்தனர்.

இந்நிலையில் காவல் ஆய்வாளர் முருகேசன், உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் மற்றும் காவலர்கள் செல்லபாண்டி, பழனிகுமார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சிந்தாமணிபுதூர் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 4 வட மாநில இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த குமார் மாலிக் (வயது 26) பிரதாப் மாலிக் (வயது 22), ராஜேஷ் மாலுக் (வயது 26), மானஸ்மாலிக் (வயது 33) என்பதும் இவர்கள் கண்ணம்பாளையம் பகுதியில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபடுபவர்கள் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடம் ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் 1. 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பத்து ஆண்ட்ராய்டு போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து குற்றவாளிகள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 181

0

0