போலீசுக்கு டிமிக்கி கொடுத்த செல்போன் கொள்ளையர்கள் சிக்கினர் : 4 இளைஞர்கள் கைது… 14 செல்போன்கள் பறிமுதல்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 March 2022, 5:59 pm

கோவை : குனியமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த நான்கு இளைஞர்களை கைது செய்த போலீசார் 14 செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை குனியமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான சுகுணாபுரம் கோவைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி செல்போன் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வந்தநிலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு போலீசார் கோவைப்புதூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வந்த 4 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் நால்வரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததோடு தப்பிக்கவும் முயற்சித்தனர். இதனிடையடுத்து அவர்களை விரட்டிப்பிடித்த போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில் நால்வரும் , அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்த ஜிஜோ, ஹக்கீம், சிவா, கோகுல் அபிஷேக் என்பதும் நால்வரும் அப்பகுதிகளில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 14 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

  • ajith kumar putting condition on producers for his next movie அஜித்குமார் போட்ட முக்கிய கண்டிஷனால் தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? ஏன் இப்படி?