சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 6 சவரன் செயின் பறிப்பு : கண்ணிமைக்கும் நேரத்தில் மர்மநபர் வழிப்பறி செய்த காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
15 May 2022, 10:02 pm

திருவள்ளூர் : பொன்னேரி அருகே நடந்து செல்லும்போது பெண்ணிடம் 6 சவரன் செயின் பறித்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

பொன்னேரி அடுத்த திருவேங்கடாபுரம் விவேகானந்தர் தெருவில் வசிப்பவர் கணிகண்ணன் (வயது 73). இவர் சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெயகுமாரி (வயது 65).

இவர் அருகே உள்ள பாலமுருகன் நகரில் வசிக்கும் தன் மகள் சங்கீதா வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்த மர்ம நபர் ஒருவர் சென்ற நிலையில் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஜெயக்குமாரின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு மர்ம நபர் தப்பி ஓடி தலைமறைவானார்.

இதுகுறித்து மகன் பிரேம் ஆனந்த் பொன்னேரி போலீசில் புகார் செய்தார் அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து அருகே உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மாலை நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளதால் திருவேங்கடாபுரம் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?