தென் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

5 March 2021, 4:23 pm
rain alert - updatenews360
Quick Share

சென்னை: தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும். சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

8ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் விடுக்கப்பட வில்லை.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 1

0

0