டெல்டா மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை: இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்..!!

By: Aarthi
15 September 2021, 2:09 pm
Quick Share

சென்னை: டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது, தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை தென் மாவட்டங்கள், ஓரிரு உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் புவியரசன் தெரிவித்துள்ளார்.

Views: - 79

0

0