தமிழகத்தில் டெல்டா மற்றும் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

3 July 2021, 4:38 pm
Rain - Updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் டெல்டா மற்றும் 9 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையின் மீது நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக இன்று நீலகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டுக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

chennai metrology - updatenews360

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். நாளை சேலம், விழுப்புரம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

ஜூலை 05ம் தேதி அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, திண்டுக்கல், கோவை, தேனி மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யலாம்.

ஜூலை 06 மற்றும் 07ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்

வங்கக்கடல் பகுதிகளில், ஜூலை 03 முதல் 04 வரை மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்தில் வீசும். அரபிக்கடல் பகுதியில் ஜூலை 03 முதல் 07 வரை தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Views: - 133

0

0