கோவையில் குறைந்த விலையில் பொருட்கள் : புதிய மினி வணிக வளாகத்தின் அசத்தல் அறிவிப்பு!!

30 January 2021, 3:05 pm
Cbe New Mall - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் குறைந்த விலையில் பொருட்கள் மற்றும் உணவுகளை விற்பனை செய்யும் வகையில் மினி வணிக வளாகம் திறக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் பல்வேறு வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில், தங்கம்& ஏ.எம்.பி மக்களின் மால் என்ற பெயரில் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சேரன் நகர் பகுதியில் மினி வணிக வளாகம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யும் நோக்கில் இந்த வணிகவளாகம் துவங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வணிக வளாகத்தின் நிர்வாக இயக்குனர் தங்கவேலு, மற்றும் முதன்மை செயல் அதிகாரி ராஜேஷ் ஆகியோர் கூறுகையில், கோவையில் தனித்துவமிக்க வகையில் இந்த வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யும் நோக்கில் இந்த மக்களின் வணிக வளாகம் செயல்பட உள்ளது.

அதோடு, உணவகமும் இங்கு உள்ளது. கோவையின் வெவ்வேறு பகுதிகளில் கிடைக்கும் மற்றும் கோவையில் கிடைத்திராத உணவுப் பொருட்களும் இந்த உணவு வளாகத்தில் கிடைக்கும். படுகர் இன மக்களின் உணவு வகைகளை கொடுக்கும் பிரத்யேக உணவமும் இங்கு உள்ளது. வணிக வளாகத்தில் பொருள் வாங்குவது என்றால் அதிக விலை என்பதை மாற்றி அமைக்கும் வகையில் இந்த வணிக வளாகம் செயல்படும் என்றனர்.

Views: - 25

0

0