முதன்மை செயலாளர் தாயார் மறைவு : நேரில் சென்று முதலமைச்சர் ஆறுதல்

31 August 2020, 3:51 pm
Cm Assistant- Updatenews360
Quick Share

சென்னை : தமிழக முதலமைச்சரின் முதன்மை செயலர் தாயாரின் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி நேரில் சென்று ஆறுதல்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முதன்மை செயலராக இருப்பவர் சசிகுமார் ஐ.ஏ.எஸ். இவரது தாயார் குப்பம்மாள் (வயது 80) , உடல் நலம் பாதிக்கப்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை மாதவரத்தில் உள்ள கலெக்டர் நகரில் உள்ள முதன்மை செயலர் சசிகுமாரின் வீட்டுக்கு நேரில் சென்றார். அவருடன் அமைச்சர்கள் பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முதன்மை செயலாளரை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். முதல்வரின் வருகையையொட்டி ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Views: - 9

0

0