26 மருத்துவர்கள்… 28 போலீஸார்… என மொத்தம் 152 பேருக்கு…! செங்கல்பட்டின் நிலை..!

30 June 2020, 4:51 pm
Corona_UpdateNews360
Quick Share

செங்கல்பட்டு : செங்கல்பட்டில் இன்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 86 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 55 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னையின் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் நோய் தொற்று அதிகரித்து வந்தது. தற்போது, மதுரை, ராணிப்பேட்டை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொரோனா புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

இந்த நிலையில், செங்கல்பட்டில் இன்று மட்டும் 152 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 26 மருத்துவர்கள், 28 போலீசாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்த மாவட்டத்தில் பாதித்தோரின் எண்ணிக்கை 5,394 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply