கை வைத்தாலே பொரிந்து விழும் சிமெண்ட் பூச்சு… CM ஸ்டாலினின் திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் தரமற்ற வீடுகள் ; ஏமாற்றத்தில் இருளர் மக்கள்..!!!

Author: Babu Lakshmanan
9 November 2023, 12:06 pm

இருளர்கள் மற்றும் திருநங்கைகளுக்காக கட்டப்பட்டு முதல்வரின் திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் வீடுகளில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கொடூர் ஊராட்சிக்குட்பட்ட ஆட்சி விளாகம் பகுதியில் இருளர்களுக்கு மத்திய, மாநில அரசு நிதியின் கீழ், 30 வீடுகளும், தமிழ்நாடு அரசு மற்றும் மொபிஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பாக திருநங்கைகளுக்கு 50 வீடுகளும் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மற்றும் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர். பனையூர் பாபு, திமுக மாவட்ட செயலாளர், கா. சுந்தர் MLA அவர்களின் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் மேற்கொண்டு வந்தனர்.

இதன் மதிப்பீடு சுமார் 5 கோடியே 24 லட்சத்தி 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 80 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் ஆய்வு செய்து தமிழக முதல்வர் முன்னிலையில் திறப்பு விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், இந்த வீடுகள் தரமற்றதாகவும், கை வைத்தாலே பெயர்ந்து வருவதை பார்த்து வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகள் குற்றம் சாட்டினர். மீண்டும் வீடுகள் சரிபார்த்து பயனாளிகளுக்கு அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். ஆனால் சரிபார்ப்பு செய்யப்பட்டும் வீடுகள் பெயர்ந்து கொட்டுகிறது.

தரமற்ற கட்டுமான பொருட்களை பயன்படுத்தியும் கட்டப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு முதல்வர் அவர்கள் குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு ஒப்பந்ததாரர்கள் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டின் பயனாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

  • lokesh kanagaraj introduce as a hero in upcoming film லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!