பரபரப்பாக காணப்பட்ட பரனூர் சுங்கச்சாவடி!!

31 August 2020, 10:40 am
Tollgate Rush - Updatenews360
Quick Share

செங்கல்பட்டு : செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் இன்று அதிகாலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் ஆமை வேகத்தில் டோல்கேட்டை கடந்து செல்கின்றன.

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் அதிக அளவில் வெளியூர் இருந்து சென்னைக்கு வருவதாலும் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் காரணத்தினாலும் இரு மார்க்கத்திலும் வாகன நெரிசல் காணப்படுகிறது.

வாரத்தின் முதல் நாள் என்பதால் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்பி வருவதால் வாகன போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது, மேலும் இன்று ஓணம் பண்டிகை என்பதால் வெளியூர் செல்பவர்களாலும் இரு பக்கமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னைக்கு திரும்புவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே இரு மார்க்கத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே அதிக அளவில் வாகன நெரிசல் ஏற்பட்டு சுங்க சாவடியை ஆமை வேகத்தில் வாகனங்கள் கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுகின்றனர்.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் நெரிசல் அதிகம் காணப்படுவதால் நாளை முதல் ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

Views: - 6

0

0