சென்னையில் ஒரு குடும்பத்தையே தீர்த்து கட்டிய வழக்கு : மருமகள் உள்பட 3 பேரை காவலில் எடுக்க அனுமதி கோரி போலீஸ் மனு..!!

16 November 2020, 5:20 pm
chennai gun shoot - updatenews360
Quick Share

சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தலில் சந்த் (74) சென்னை சவுகார்பேட்டையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 11ம் தேதி இவரையும், மகன், மனைவி ஆகியோரும் துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் வீட்டில் சடலமாக மீட்டனர்.

இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், ஷீத்தலின் மனைவி ஜெபமாலாவின் குடும்பத்தினர்தான் இந்த கொலைகளை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு, ஜெபமாலாவை தேடி வந்தனர். இந்த சூழலில், 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஷீத்தலின் மனைவி ஜெபமாலா உள்பட 3 பேரை புனேவில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

பிறகு, அவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது, அவர்களுக்கு நவம்பர் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை யானைக்கவுனியில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கைலாஷ், ரவீந்தரநாத், விஜய் உத்தம் ஆகிய 3 பேரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சென்னை போலீஸ் மனு செய்துள்ளது.

Views: - 31

0

0