புதுப்பொலிவுடன் மாற்றப்பட்ட அண்ணா சுரங்கப்பாதை : சென்னை மக்கள் வரவேற்பு!!
16 September 2020, 2:09 pmசென்னை : மிகப்பெரிய சுரங்கப்பாதையில் ஒன்றான பழைய அண்ணா சுரங்கப்பாதை புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டது.
சென்னையில் மிக்கபெரிய சுரங்கப்பாதையில் ஒன்றான பழைய அண்ணா சுரங்கப்பாதை அண்ணா சலையில் அரசினர் தோட்டம் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது.
தற்போது அந்த சுரங்கப்பாதை புதுபிக்கப்பட்டு, அரசினர் தோட்டம் மேட்ரோ ரயில் நிலைய பொதுத் தளத்திற்கு சுரங்கப்பாதை நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள வாலஜா சாலை, எல்லிஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை மற்றும் அண்ணா சாலை ஆகிய இடங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் பயன்படுத்தும் வகையில் சுரங்கப்பாதை புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டுள்ளது,
இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்த சுலபமாக மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம், அதே போல சாலையை எளிதாக கடக்கலாம். இந்த சுரங்கப்பாதை காதிபவன் மற்றும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையையும் இணைக்கிறது.
அதே போல பயணிகளுக்கு புரியும் வகையில் ஏதுவாக மெட்ரோல் ரயில் நிலையத்தில் வழி நடத்த நுழைவு வாயில் மற்றும் நடைபாதைகளிலும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. புதுப்பொலிவுடன் அண்ணா சுரங்கப்பாதை சீரமைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
0
0