போதையில் கெட்ட ஆட்டம்… மாணவிகள் சென்ற கார் கவிழ்ந்து விபத்து : சென்னையில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
3 November 2021, 1:49 pm
car accident - updatenews360
Quick Share

சென்னை : மெரினா அருகே நள்ளிரவில் சாலையில் தாறுமாறாக ஓடிய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மாணவிகள் உள்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

நேற்று நள்ளிரவில் மெரினா கடற்கரையில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலையை நோக்கி அதிவேகமாக கார் ஒன்று சென்றது. அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் சாலை தடுப்புகளின் மீது மோதி அந்தக் கார், தூக்கி வீசப்பட்டதுடன், தலைக்குப்புறவும் கவிழ்ந்தது.

உடனடியாக அங்கிருந்தவர்கள் சென்று பார்த்த போது, காரில் பயணித்த 2 மாணவிகள் உள்பட 4 பேர் வெறும் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, நடத்திய விசாரணையில், காரை ஓட்டி சென்ற ஸ்ரீகாந்த் என்பவர், மது அருந்தி இருப்பது தெரிய வந்தது.

மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், நான்கு பேரையும் சாஸ்த்திரி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

Views: - 467

0

0