பாதிப்புகளை போலவே குறைந்து வரும் பலி எண்ணிக்கை : சென்னையில் தடுப்பு நடவடிக்கைகள் அபாரம்..!

1 August 2020, 10:28 am
Quick Share

சென்னை: தலைநகர் சென்னையில் கொரோனாவுக்கு நேற்று இரவு முதல் காலை வரை 14 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் உச்சத்தை தொட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது 2 லட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு முன்பை விட தற்போது குறைந்துள்ளது. இருப்பினும், இந்த நோய் தொற்றிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை மட்டும் அவ்வப்போது குறைந்தும், அதிகரித்தும் வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 14 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 பேர், ஓமந்தூரார் மருத்துவமனையில் 2 பேர், தனியார் மருத்துவமனையில் 2 பேரும் பலியாகி உள்ளனர்.

Views: - 11

0

0