முன் பகை காரணமாக கூலிப்படையை ஏவி அரிவாள் வெட்டு : தொழில் ரீதியான பிரச்சனையால் நடந்த விபரீதம்!!

Author: Babu
16 October 2020, 8:17 pm
kodungaiyur police station - updatenews360
Quick Share

சென்னை : சென்னையில் தொழில் ரீதியாக ஏற்பட்ட முன் பகையின் காரணமாக, கூலிப்படையை ஏவி, கொலை செய்ய முயன்ற நபர் மற்றும் கூலிப்படை கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு வயது 33. இவர் வெளிநாடுகளிலிருந்து பொருள்களை வாங்கி விற்கும் வேலை செய்து வருகிறார். தண்டையார் பேட்டையை சேர்ந்த பாலமுருகன் (44) என்ற நபரும் பிரபுவுடன் சேர்ந்து இதே தொழிலை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபுவுக்கும், பாலமுருகனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு தகராறில் முடிந்துள்ளது.

இதனால் உருவான முன்பகை காரணமாக, பாலமுருகன் கூலிப்படைக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து, பிரபுவை வெட்டி சாய்க்குமாறு கூறியுள்ளார். இதனையடுத்து கடந்த 2ம் தேதி ஒரு கும்பல் பிரபுவை சரமாரியாக தாக்கியது. இதில், அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொடுங்கையூர் போலீசார் விசாரித்ததில், பாலமுருகன் கூறியதன் பேரில் மணலியை  சேர்ந்த கூலிப்படை கும்பல் இந்த வேலையை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, மணலியை சேர்ந்த சதீஷ்குமார் (30), நாகராஜ் (26), சரத்குமார் (32) மற்றும் இதற்கு மூளையாக செயல்பட்ட பாலமுருகன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 52

0

0