நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவருக்கு ஸ்கெட்ச்… பயங்கர ஆயுதங்களோடு பதுங்கிய கும்பல்… திமுக பிரமுகர் உட்பட 6 பேர் கைது!!

Author: Babu Lakshmanan
9 May 2024, 1:34 pm

சென்னையில் முன்விரோதம் காரணமாக கொலை செய்யும் நோக்கில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த திமுக பிரமுகர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் தரப்பில் கூறியதாவது :- சென்னை பாரிமுனை அருகே இருக்கும் டீக்கடை ஒன்றின் அருகே ஆயுதங்களுடன் கும்பல் ஒன்று பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அதில், 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதைக் கண்டுபிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் சென்னை ஓட்டேரி மங்களபுரத்தைச் சேர்ந்த யஸ்வந்த்ராயன் (25), நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த ஜெய்பிரதாப் (18), அயனாவரம் கார்த்திகேயன் (20), பெரம்பூர் பிரான்சிஸ் (25), அதேபகுதி கார்த்திக் (25), மங்களாபுரம் கோகுல்நாத் (20) என்பது தெரியவந்தது. பின்னர், அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்கள், 4 அரிவாள்களைப் பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க: இரவு நேரத்தில் வெக்கை.. காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய இளம்பெண் பலாத்காரம் : சென்னையில் ஷாக்!!!

விசாரணையில் யஸ்வந்த்ராயன் மற்றும் பிரான்சிஸ் ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும், இவர்கள் இருவருக்கும் சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த சரண் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, சரணை கொலை செய்யும் நோக்கில், வழக்கு ஒன்றிற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அவரை கொலை செய்ய யஷ்வந்த் தனது கூட்டாளிகளுடன் பதுங்கியிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட யஸ்வந்த்ராயன் ஓட்டேரிபகுதி திமுக பிரமுகராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!