கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டுக : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!!!

22 April 2021, 6:08 pm
Madras_High_Court_UpdateNews360
Quick Share

கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்றும், அவற்றை கூட்டு பொறுப்புணர்ந்து அனைவரும் பின்பற்ற வேண்டுமென்றும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறித்தியுள்ளது.

கடந்த ஆண்டு அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற முதல்வர் வேட்பாளர் அறிவித்த நிகழ்ச்சியில், கொரோனா விதிகளை பின்பற்றவில்லை எனக் கூறி வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, விதிகளை பின்பற்றி, உதாரணமாக இருக்க வேண்டிய அமைச்சர்களும், எம்.எல்.ஏ..க்களும் சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளதால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், அதை அரசு கண்காணிக்கவும் அறிவுறித்தினர். சென்னையில் மட்டுமே பெரும்பாலானோர் முககவசம் அணிவதாகவும், மற்ற இடங்களில் அவ்வாறு அணிவதில்லை என கவலை தெரிவித்தனர்.

கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்றும், அவற்றை பின்பற்றுவதில் அனைவருக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளது எனவும் அறிவுத்தினர். கொரோனா தடுப்பு விதிகளான முகக்கவசம், தனிமனித இடைவெளி, முறையாக கைகழுவுதல் ஆகியவற்றை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அரசும் பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டி வழக்கை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

Views: - 103

0

0