3ஆம் பாலினத்தவரை காவல்துறை துன்புறுத்தினால் நடவடிக்கை தேவை : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2021, 2:03 pm
Transgender HC -Updatenews360
Quick Share

சென்னை : 3 ஆம் பாலினத்தவரை காவல்துறையினர் துன்புறுத்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 3 ஆம் பாலினத்தவர்களான திருநங்கைகள், திருநம்பிகள், ஓரினச்சேர்க்கையாளர்களைத் துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி,நடவடிக்கை எடுக்க புதிய விதிமுறைகள் கொண்டு வருமாறும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,3 ஆம் பாலினத்தவரை துன்புறுத்தக் கூடாது என காவல்நிலையத்துக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றும்,அவர்களை எப்படி கையாள வேண்டும் என்று காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது.

Views: - 289

0

0