கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து : 3 பேருந்துகள் முற்றிலும் எரிந்தன!!

23 August 2020, 2:15 pm
Koyambedu Fire - Updatenews360
Quick Share

சென்னை : கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேருந்துகள் பிடித்து எரிந்தது.

கொரோனா தொற்றால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது. பொது போக்குவரத்து சேவை தடை செய்யப்பட்டுள்ளதால் பேருந்துகள் பணிமனையில் நிறுவத்தப்பட்டுள்ளது. அதே போல தனியார் பேருந்துகள் பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் ஒரே இடத்தில் பல நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கோயம்போடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்துகளில் திடீரென தீ பற்றி எரிந்தது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் நிறுத்தப்பட்ட 3 பேருந்துகள் முற்றிலும் எரிந்துள்ளதாகவும், எஞ்சியுள்ள 2 பேருந்துகளில் பரவிய தீயை அணைக்கம் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,.

நிறுத்தப்பட்ட பேருந்துகளில் உரிய பராமரிப்பு இல்லாததால், வெளியில் வருபவர்களால் தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என்றும், ஆம்னி பேருந்து நிலையம் பராமரிப்பு இல்லாததால் வெளியில் இருந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது என அப்பகுதியை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Views: - 26

0

0