சென்னை மெட்ரோ ரயில் திட்டம் விரிவுப்படுத்த நிதி ஒதுக்கீடு : மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!!

1 February 2021, 1:46 pm
Chennai Metro- Updatenews360
Quick Share

சென்னையில் 63 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மெட்ரோ இரண்டாவது கட்ட திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் இன்று 2021-2022ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் குறித்து உரையாற்றி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதன்முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்தார்.

மூன்றாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் உரையாற்றிய போது, பொது போக்குவரத்து பேருந்து வசித்கென ரூ.18 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.

மேலும் ரயில்வே துறைக்கு ரூ.1.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், ஜூன் 2022ஆம் ஆண்டுக்குள் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சரக்கு பாதை அமைக்கப்படும் என தெரிவித்தார்.

வரும் 2023ஆம் ஆண்டு டிசம்பருக்குள் அனைத்து ரயில் வழித்தடமும் மின்மயமாக்கப்படும் என தெரிவித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னையில் ரூ.63 ஆயிரம் கோடி மதிப்பில் மெட்ரோ 2வது கட்ட திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

Views: - 24

0

0