அம்மா முழு உடல் பரிசோதனை மையம்…! ரூ.4 ஆயிரம் கட்டணத்தில் பிளாட்டினம் பிளஸ் திட்டம் அறிமுகம்

9 August 2020, 12:43 pm
Quick Share

சென்னை: சென்னையில் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் செயல்பட தொடங்கியது.

4 மாதங்களுக்கு பிறகு மருத்துவமனையில் இந்த மையம் செயல்படுகிறது. ரூ.4 ஆயிரம் கட்டணத்தில் அம்மா பிளாட்டினம் பிளஸ் என்ற புதிய பரிசோதனை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனையின் தொடர்பு அதிகாரி டாக்டர் வி.ஆனந்த்குமார் கூறியதாவது: சென்னையில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால், அம்மா முழுஉடல் பரிசோதனை மையம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

ஏற்கெனவே உள்ள 3 பரிசோதனை திட்டங்களுடன் இந்த பரிசோதனை திட்டமும் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதய செயல்பாட்டைகண்டறியும் பரிசோதனை செய்யப்படுகிறது.

கண்பார்வை, கண் அழுத்தம், பார்வை குறைபாடு, விழித்திரை, நுரையீரல் செயல்பாடு பரிசோதனைகளும் செய்யப்படும். பரிசோதனை செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 7338835555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஒரு நாளில் 15 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படும்.

பரிசோதனைகளை தனியார் மருத்துவமனையில் செய்துகொள்ள ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவாகும். பரிசோதனைக்கு வரும் பயனாளிகளுக்கு கட்டணமின்றி தரமான, சுகாதார உணவு தரப்படுகிறது என்று அவர் கூறினார்.

Views: - 14

0

0