இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு… 4 நாட்களில் மட்டும் பெட்ரோல் ரூ.2.27 அதிகரிப்பு… டீசல் விலையும் உச்சம்..!!

Author: Babu Lakshmanan
25 March 2022, 8:23 am
Petrol Price - Updatenews360
Quick Share

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

இதற்கிடையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்தது. இந்த விலைக்குறைப்பு அமலுக்கு வந்தது முதல் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றமில்லை.

இதனால், சென்னையில் கடந்த பல நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 ஆகவும், டீசல் ரூ.91.43 ஆகவும் விற்கப்பட்டது. 137 நாட்களுக்கு பிறகு கடந்த மார்ச் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் விலை உயர்ந்து காணப்பட்டது. ஆனால், நேற்று எந்தவித மாற்றமுமின்றி காணப்பட்டது.

இந்த நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் அதிகரித்து ரூ.103.67 ஆகவும், டீசல் விலை 76 காசுகள் உயர்ந்து ரூ.93.71க்கு விற்பனை செய்யப்படுகிறது. 4 நாட்களில் பெட்ரோல் ரூ.2.27, டீசல் ரூ.2.28 அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவலையில் உள்ளனர்.

Views: - 735

0

0