டம்மி துப்பாக்கி வைத்து மிரட்டி வந்த ரவுடி… வாகன தணிக்கையின் மடக்கி பிடித்த போலீஸ்… நாட்டு வெடிகுண்டு பறிமுதல்!!

Author: Babu Lakshmanan
14 October 2022, 5:01 pm

சென்னையில் டம்மி துப்பாக்கி வைத்திருந்த சரித்திரப்பதிவேடு குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பெருநகரில் குற்றப் பின்னணி நபர்களின் குற்றச் செயல்களை கண்காணித்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் அவர்கள் உத்தரவின்பேரில், பல்வேறு சிறப்பு சோதனைகள் மற்றும் வாகன தணிக்கைகள் மேற்கொண்டு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மதுரவாயல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வானகரம் பகுதி அருகே காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.

அதன்பேரில் மேற்படி நபர் கொண்டு வந்த பையை சோதனை செய்த போது, அதில் பொம்மை துப்பாக்கி மற்றும் 1 நாட்டுவெடிக்குண்டு இருந்தது தெரியவந்தது.

அதன்பேரில் பொம்மை துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த செல்வம் (எ) ரோஸ் பாக்யம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 பிளாஸ்டிக் பொம்மை துப்பாக்கி, 1 நாட்டு வெடிகுண்டு, 2 செல்போன்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க தேவையான கூழாங்கற்கள், ஆனிகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட ரோஸ் பாக்யம் என்பவர் சோமங்கலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் இவர் மீது ஏற்கனவே 1 கொலை வழக்கு உள்ளதும் தெரிவந்தது. கைது செய்யப்பட்ட ரோஸ் பாக்யம் என்பவர் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?