வாரத் தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை… இன்றைய தங்கம் விலை எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
29 January 2024, 11:23 am

வாரத் தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை… இன்றைய தங்கம் விலை எவ்வளவு தெரியுமா..?

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. ஆனால், 2024ம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை சரிந்து வருவது ஆபரண பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,845க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,788க்கும், சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,304க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • chinmayi come back to tamil cinema after 6 years ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…