ஆளுநருக்கு கருப்புக்கொடி.. நாகை எம்பி உள்பட 200 பேர் சாலை மறியல்… தடுத்து நிறுத்தி கைது செய்த போலீசார்…!!

Author: Babu Lakshmanan
29 January 2024, 8:38 am
Quick Share

தேசத்தந்தை மகாத்மா காந்தியை இழிவுபடுத்தியும், தமிழ்நாடு உரிமைகளுக்கு எதிராக செயல்படும் தமிழக ஆளுநர் திருவாரூர் வருகையை கண்டித்து நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழக ஆளுநர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசத்தந்தை மகாத்மா காந்தியை இழிவுபடுத்தி பேசியதை கண்டித்தும் தமிழ்நாடு உரிமைகளுக்கு எதிராக செயல்படும் தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்து தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்ற வருகிறது.

இந்த நிலையில் நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் ரவி பங்கேற்றார். இதற்காக திருவாரூர் வருகை தரும் தமிழக ஆளுநரை கண்டித்து மதசார்பற்ற அரசியல் இயக்கங்கள் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் புதிய ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மேம்பாலம் பகுதிக்கு செல்ல முயன்ற 200க்கும் மேற்பட்டவர்கள் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்களை போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 274

0

0