கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாம போச்சே.. 49 ரூபாய்க்கு சில்லியுடன் சிக்கன் பிரியாணி : பொதுமக்களுக்கு காத்திருந்த ஷாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 September 2023, 4:38 pm

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாம போச்சே.. ரூ.49 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி : பொதுமக்களுக்கு காத்திருந்த ஷாக்!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சேலம் சாலையில் இன்று புதியதாக பிரியாணி கடை ஒன்று திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக ஒரு நாள் மட்டும் ₹49 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி மற்றும் சில்லி சிக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து மதியம் முதலே ஏராளமான பொதுமக்கள் சிக்கன் பிரியாணியை வாங்க குவிந்த நிலையில், பிரியாணி கிடைக்காதவர்களுக்கு மாலையில் பிரியாணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு, சுமார் 1000 நபர்களுக்கு வழங்கப்படும் வகையில் சிக்கன் பிரியாணி தயார் செய்யப்பட்டது.

இந்நிலையில் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டமாக கூடியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சிக்கன் பிரியாணி தீரும் நிலையில் இருந்ததால் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு பிரியாணியை வாங்கிச் செல்ல முயன்றனர்.

இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே சிக்கன் பிரியாணி இல்லை என கடை உரிமையாளர் கூறியதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

மேலும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ள இந்த கடையின் திறப்பு விழா நாளில், சலுகை விலையில் சிக்கன் பிரியாணி வாங்கி சாப்பிடலாம் என ஆசையோடு வந்திருந்த பொது மக்களின் பெரும்பாலானோர் சிக்கன் பிரியாணி கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?