ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு தேசிய விருது : கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் பாராட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 September 2023, 3:48 pm

ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு தேசிய விருது : கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் பாராட்டு!!

‘ஸ்மார்ட் சிட்டி’ எனப்படும் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களை தேர்வு செய்துள்ள மத்திய அரசு, வருடத்திற்கு ரூ.200 கோடி வீதம், ஐந்து வருடங்களுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அந்த நகரங்களின் வளர்ச்சிக்கு உதவி வருகிறது.

அந்த வகையில் கோவையில் பல திட்டங்கள் கொண்டு வந்து மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கோவையில் பல திட்டங்களுக்கு மக்கள் வரவேற்பு அளித்தனர். ஏரிகளை அழகுபடுத்துதல் மற்றும் புத்துயிர் அளிப்பது மற்றும் மாதிரி சாலைகள் மேம்பாடு ஆகியவை, இந்தியா ஸ்மார்ட் சிட்டி விருதுக்கான நான்காவது பதிப்பில் ‘ கட்டப்பட்ட சூழல் ‘ பிரிவில் கோவை முதலிடம் பெற உதவியது.

இந்த நிலையில் ஒவ்வொரு செப்டம்பர் 15ஆம் தேதி பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி கோயம்புத்தூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் பொறியாளர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் சார்பபில் விழாவில் பங்கேற்ற பொதுமக்களுக்கு இலவசமாக ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

ஆல், அரசு, வேம்பு, மூங்கில், வாகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதை தவிர மாநகராட்சி பள்ள மாணவ மாணவிகளுக்கான இலவச கண் சிகிச்சை முகாம், இலவச கண் கண்ணாடி வழங்கும் முகாமும் நடைபெற்றது.

அதில் கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் தலைவர் உதயகுமார், செயலாளர் கேசிபி சந்திர பிரகாஷ், பொருளாளர் அம்மாசையப்பன், துணை செயலாளர் மைக்கேல், செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேசிய அளவில் உக்கடம், பெரியகுளம், வாலாங்குளம் புனரமைத்தல், டிபி ரோடு சீரமைத்தல் பணிக்காக தேசிய அளவில் முதலிடம் பிடித்து விருதுக்காக தேர்வானது. மேலும் தென் இந்திய அளவில் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் கோவை மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது.

இதற்காக திறம்பட பணியாற்றிய கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை கமிஷனர் சிவகுமார், மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், மண்டல தலைவர்கள் கவுன்சிலர்கள் மற்றும் பொறியாளர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விழாவில் பாராட்டு தெரிவித்து நற்சான்று வழங்கப்பட்டது.

  • sirakadikka aasai episode update மீனாவை சீண்டும் முத்து…ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்..விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை தொடர்…
  • Views: - 329

    0

    0