நல்லகண்ணுவின் 96வது பிறந்தநாள்: முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாழ்த்து…!!

26 December 2020, 12:27 pm
nallakannu birthday - updatenews360
Quick Share

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு இன்று 95வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில்,

இன்று பிறந்தநாள் காணும் விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான மரியாதைக்குரிய திரு.நல்லக்கண்ணு ஐயா அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் மகிழ்ச்சியோடு வாழ இறைவனை வேண்டி, எனது உளமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நல்லகண்ணு நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியோடு பல்லாண்டுகள் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0