ஆக. 6ம் தேதி மதுரைக்கு பயணமாகும் முதலமைச்சர்…! கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு

1 August 2020, 12:04 pm
Edappady 06 updatenews360
Quick Share

மதுரை: கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் வரும் 6ம் தேதி ஆய்வு நடத்துகிறார்.

வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தை ஆட்சியர் வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன் தலைமையில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பின் அமைச்சர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: கொரோனா பற்றி மக்கள் பயப்பட வேண்டாம்.

தொற்று ஏற்பட்டால் அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு குணமடைந்து விடலாம். வசதி இல்லாதவர்கள் கொரோனா சிகிச்சை மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழகத்தில் தான் கொரோனாவால் குணம் அடைந்தவர்கள் சதவீதம் நாட்டிலேயே அதிகம்.

மதுரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 6ம் தேதி நேரில் ஆய்வு செய்கிறார்.கொரோனா தடுப்பு பணிகள், வளர்ச்சிப்பணிகள் குறித்து  ஆலோசனை வழங்குவார். அனைத்து அரசு மருத்துவமனைகளையும் சேர்த்து 1,937 படுக்கைகள் உள்ளன.

தனியார் மருத்துவமனைகளில் 591 படுக்கைள், கோவிட் கேர் சென்டர்களில் 4,000 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மதுரையில் மட்டும் 7 ஆயிரத்து 590 தீவிர காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன என்று கூறினர்.