கோனியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

23 January 2021, 8:50 am
Quick Share

கோவை: இரண்டு நாள் பிரச்சார பயணமாக கோவை வந்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோனியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக நேற்று இரவு கோவை வந்தார். தொடர்ந்து இன்றும் நாளையும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இந்த சூழலில், இன்று காலை பிரச்சாரம் துவங்குவதற்கு முன்பு கோனியம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு சென்றார்.

அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுக., சார்பில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்த முதலமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, பிரச்சாரத்திற்கு புறப்பட்டு சென்றார்.

அப்போது அமைச்சர் எஸ் பி வேலுமணி, எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜுனன், பிஆர்ஜி அருண்குமார், ஆறுகுட்டி, ஓகே.சின்னராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Views: - 7

0

0