திருவாரூருக்கு 28ம் தேதி வருகை தரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் காமராஜ் தகவல்…

25 August 2020, 8:39 pm
Quick Share

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளார் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூரில் இன்று செய்தியாளர்களை அமைச்சர் காமராஜ் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அதன் அடிப்படையில் வருகிற 28ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்தும் கொரோனா தடுப்புப் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக தமிழக முதலமைச்சர் வருகை தருகிறார்கள். மேலும் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதற்கு காரணம் மருத்துவ வல்லுநர் குழுக்கள் கூறியதான் அடிப்படையில் பொதுப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

மீண்டும் அவர்களிடமிருந்து அறிக்கை பெற்ற பின்புதான் தமிழக முதலமைச்சர் அதுகுறித்து முடிவெடுப்பார்கள்.
குறுவை சாகுபடியை பொருத்தவரை டெல்டா மாவட்டங்களில் 3 லட்சத்து 87 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒரு லட்சம் ஏக்கர் கூடுதலாக குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது சாகுபடிக்கு ஏற்ற தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. குறுவை சாகுபடி முழுவதும் தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கையை தமிழக முதலமைச்சர் எடுத்து வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Views: - 29

0

0