20 ஆயிரம் ரெம்டெசிவிர் ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

16 May 2021, 9:28 pm
Quick Share

சென்னை: தமிழகத்திற்கு கூடுதலாக ரெம்டெசிவிர் மருந்தை ஒதுக்கீடு செய்த மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்காக மக்கள் அலைமோதிய நிலையில், மத்திய அரசு ஒதுக்கீட்டை நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் அளவில் அதிகரித்தது.கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதற்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போதுமான கையிருப்பு இல்லாததால் மாநில முழுவதும் அரசு மருத்துவமனையில் முன்பு ஆயிரக்கணக்கானோர் இந்த மருந்தை வாங்க நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. சில இடங்கில் இரவு முழுவதும் காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டது.

இதனால் தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தின் அளவை அதிகரிக்கக்கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுத்தினார். முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று தமிழகத்திற்கு நாளொன்றிற்கு 20 ஆயிரம் என்ற அளவில் உயர்த்தியது.இதனால் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழகத்திற்கு தினசரி 7 ஆயிரமாக ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த ஒதுக்கீட்டை 20 ஆயிரமாக கூடுதலாக்கிய மத்திய அரசுக்கு நன்றி எனவும், இந்த சூழ்நிலையில், உயர்காக்கும் மருந்து, ஆக்சிஜன் தேவை இன்றியமையாதது என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 76

0

0