தமிழர் திருநாள் பண்டிகை: சொந்த ஊரில் பொங்கலிட்டு கொண்டாடிய முதலமைச்சர் பழனிசாமி..!!

14 January 2021, 5:03 pm
cm pongal - updatenews360
Quick Share

சேலம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடினார்.

தமிழர் திருநாளான தை முதல் நாளான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். சூரிய பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என பொங்கல் பண்டிகை மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் அதிகாலை முதலே புத்தாடைகள் அணிந்து வீட்டின் முன்பு வண்ண கோலமிட்டு பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டு வருகின்றனர். அதன்படி தமிழக முதலமைச்சரும் தனது சொந்த கிராமத்தில் தனது குடும்பத்தினருடன் பொங்கல் திருநாளை கொண்டாடினார்.

முதலமைச்சருக்கு விமான நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் ராமன் மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து கார் மூலம் எடப்பாடி அருகே சிலுவம்பாளையத்தில் உள்ள இல்லத்திற்கு வருகை தந்தார். அவருக்கு ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொங்கல் கொண்டாட்டத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. முதலமைச்சர் வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் அவரால் கட்டப்பட்ட பாலமுருகன் திருக்கோவில் வளாகத்தில் அவரின் உறவினர்கள் ஒன்றிணைந்து ஒரே பானையில் பொங்கல் வைத்தனர். அதனைத்தொடர்ந்து உறவினர்கள் ஒன்றிணைந்து வைத்த பொங்கலை முருகன் சன்னதியில் படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

இதில் முதலமைச்சரின் உறவினர்கள், ஊர் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டுள்ளனர்.

Views: - 9

0

0