மு.க.தமிழரசு மாமியார் மறைவு…நேரில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்: அமைச்சர்களும் அஞ்சலி..!!

Author: Aarthi Sivakumar
21 December 2021, 12:48 pm
Quick Share

கோவை: கோவையில் மறைந்த, மு.க.தமிழரசு மாமியார் ஜெயலட்சுமியின் உடலுக்கு தமிழக முதல்வர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

கோவை வடவள்ளியில் உள்ள மு.க.தமிழரசு மாமியார் ஜெயலட்சுமி (82) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை கோவை வந்தார்.

அங்கிருந்து கார் மூலம் கோவை வடவள்ளியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மறைந்த ஜெயலட்சுமியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்த நிகழ்வின் போது மு.க.தமிழரசு, துர்கா ஸ்டாலின், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், முரசொலி செல்வம், அருள்நிதி, தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, ராஜகண்ணப்பன், முத்துச்சாமி, பெரியகருப்பன், காந்தி, வெள்ளகோவில் சாமிநாதன், மெய்யநாதன், கீதா ஜீவன் ஆகியோர் உடனிருந்தனர்.

Views: - 311

0

0