உதயநிதிக்கு இருக்கற அறிவு கூட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்ல : இரட்டை வேடம் போடும் திமுக… அர்ஜூன் சம்பத் சரமாரி குற்றச்சாட்டு!

Author: Udayachandran RadhaKrishnan
8 September 2022, 1:08 pm
Arjun Sampath - Updatenews360
Quick Share

உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கும் அறிவு கூட முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை என இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.

திண்டுக்கல்லில் நேற்று நள்ளிரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டார்

விடுதலைக்குப் பின் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கம்யூனிஸ்ட் என்பவர்கள் கபட வேடதாரிகள் என்றும் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கம்யூனிஸ்டு கட்சியினரை பற்றி கூறுகையில் கனவில் கூட இந்த நாடு நல்லா இருக்கணும்னு நினைக்காத ஒரே கட்சியினர் கம்யூனிஸ்ட் கட்சியினர் என்று கூறியுள்ளதாக தெரிவித்தார்.

இத்தகைய கம்யூனிஸ்ட் கட்சியினர் இப்பொழுது திமுகவில் ஊடுருவி அரசு எந்திரத்தையும் திமுக கட்சியினரையும் முழுக்க முழுக்க பயன்படுத்தி வருகிறது. ஆகையால் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் உஷாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் இந்த கம்யூனிஸ்ட் கட்சியினரை நன்றாக டீல் செய்திருப்பார் என்றும், அதேபோல் கூட்டணி கட்சியினரை யார் யாரை எங்கெங்கே வைக்க வேண்டும் என்று கருணாநிதி நன்றாக தெரிந்திருந்தார் என்றும், ஆனால் ஸ்டாலினோ இது அவர்கள் ஆட்சி அதாவது கூட்டணி கட்சியினரின் ஆட்சி என்று கூறி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறி வருவதிலிருந்து ஸ்டாலின் அவர்கள் எந்த அளவுக்கு பலியாகி உள்ளார் என்றும், திமுகவில் இருக்கக்கூடிய மூத்தத் தலைவர்கள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி திமுகவை கூட்டணி கட்சியினரிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஆளுமை திறன் இல்லை என்றும், உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கும் அறிவு கூட தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா அவர்கள் கோயிலுக்கு செல்வதும் கும்பாபிஷேகங்கள் செய்வதை தாங்கள் வரவேற்பதாகவும், ஆனால் தமிழக முதல்வரோ ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து கூறுகிறார். விநாயகர் சதுர்த்திக்கு ஒரு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை. இது எவ்வாறு உள்ளது என்றால் பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவலன் என்று இரட்டை வேடம் திமுக போடுவதாக அர்ஜுன் சம்பத் குற்றம் சாட்டினார்

Views: - 183

0

0