கோவையில் திடீரென சாலை பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின்.. அதிகாரிகளுக்கு ஆர்டர்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 September 2023, 4:42 pm

கோவையில் திடீரென சாலை பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின்.. அதிகாரிகளுக்கு ஆர்டர்!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதி படியூரில் நடைபெறும் திமுக மண்டல அளவிலான வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.

அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு பின்னர் சாலை மார்க்கமாக காங்கேயம் புறப்படுகிறார். இதனிடையே விமான நிலையத்திலிருந்து கார் மூலம் சென்ற முதலமைச்சர் விளாங்குறிச்சி பகுதியில் திடீரென சாலை பணிகளை ஆய்வு செய்தார்.

அப்பகுதியில் சாலை புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், அமைச்சர்கள் நேரு, பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!