பேரறிவாளன் விடுதலைக்கு முதலமைச்சர் துணையாக இருப்பார் : அற்புதம்மாள் நம்பிக்கை…
23 November 2020, 6:50 pmதிருப்பத்தூர் : எனது மகனின் விடுதலைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணையாக இருப்பார் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கூறுகையில் இப்பொழுது ஆளுகின்ற அம்மா அரசு என்று சொல்லிக்கொண்டிருக்க முதல்வர் அவர்கள் ஆளுநரை சந்திக்கும் பொழுது, விடுதலை குறித்து அவரிடம் பேசி என்னுடைய மகனுக்கு விடுதலை வாங்கித் தரவேண்டும் என கூறியுள்ளார்
மேலும் என்னுடைய மகன் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு சென்று உள்ளதால் அதனால் பரோல் கேட்டு அவரை நான் இப்பொழுது பராமரித்து வருகிறேன். என்னுடைய கணவரின் உடல் நிலையும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆகையால் என் மகனுக்கு நிரந்தர விடுதலை வேண்டும் என்ற கோரிக்கையை மேலும் மேலும் வலியுறுத்தி வருகின்றேன். என்னுடைய மகனுக்கு விடுதலை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முதல்வரிடம் வேண்டி கேட்டுக் கொள்கின்றேன். அதற்கு ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை மேலும் மேலும் வலியுறுத்தி வருகின்றேன் என அற்புதம்மாள் கூறினார்.
0
0