கோவையில் தொழில் அமைப்புகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

22 January 2021, 9:45 pm
Quick Share

கோவை: கோவையில் உள்ள தொழில்துறையினரின் கோரிக்கைகளை கேட்கும் விதமாக முதலமைச்சர் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இரண்டு நாள் பிரச்சார பயணமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று விமானம் மூலமாக கோவை வந்தார். தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறு நாள் என கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். கோவையில் தொழில் துறையினர் தங்கள் தொழிலில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்த சூழலில், தொழில்துறையினர் முதலமைச்சரை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை தெரிவிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, இன்று கோவை வந்தவுடன் முதலமைச்சர் தொழில்துறையினரை சந்தித்துள்ளார். அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கொடிசியா, சைமா, கோப்மா, இந்த தொழில் வர்த்தக சபை, கோப்மா, கொசிமா, கௌமா உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்து வருகின்றனர்.

Views: - 0

0

0