கந்து வட்டிக் கொடுமையால் தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் : மனதை ரணமாக்கும் காட்சி!!!

2 March 2021, 2:13 pm
Suicide attempt -Updatenews360
Quick Share

கோவை : கந்து வட்டிக் கொடுமையால் கோவையில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சித்த வீடியோ வெளியாகி பதை பதைக்க வைத்துள்ளது.

கோவை, கிணத்துக்கடவு அடுத்த செட்டியக்காபாளையம் பகுதியை சேர்ந்த சேதுராமன் என்பவரின் மகன் விஜயகுமார் ( வயது 40). இவர் அதே பகுதியில் கோழி கடை நடத்தி வருகிறார். மேலும் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழிலும் செய்து வருகிறார்.

விஜயகுமாருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். விஜயகுமார் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் 20 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றிருக்கிறார். அந்த கடனை 11 ஆயிரம் ரூபாயை விஜயகுமார் திருப்பி செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

9 ஆயிரம் ரூபாயை திருப்பித் தராமல் இருந்துள்ளார். இந்நிலையில் விஜயகுமார் தனது கடையில் இருந்த பொழுது பணம் கொடுத்தவர் வந்து தகாத வார்த்தைகளால் பேசி இருக்கிறார். மேலும் பொதுமக்கள் முன்னிலையில் விஜயகுமாரை அந்த நபர் அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த விஜயகுமார் அந்த இடத்திலேயே மினி டெம்போவில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து ஊற்றிக் கொண்டு தனக்கு தானே தீ வைத்து கொளுத்தி கொண்டார்.

இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அந்த தீயை அணைத்து அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 5

0

0