சர்ச், பள்ளிவாசலுக்கு YES.. கோவிலுக்கு NO : குமரியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!!

Author: Udayachandran
3 August 2021, 7:03 pm
Kumari Bjp Protest- Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : இந்துக் கோயில்களில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கக் கோரி நாகர்கோவில் நாகராஜா கோவில் உட்பட மாவட்டம் முழுவதும் 10 திருக்கோயில்கள் முன்பு பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கொரோனா பரவல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து கோவில்களில் பக்தர்கள் வழிபட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தமிழகம் முழுவதும் பிரசித்த பெற்ற ஆலயங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மற்ற மதங்களை சார்ந்த ஆலயங்களில் வழிபாடு நடக்கும் போது இந்து கோயில்களில் மட்டும் பக்தர்கள் வழிபட தடை செய்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நாகராஜா கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், குமாரகோவில், முருகன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் போன்ற 10 திருக்கோவில்களில் முன்பு இன்று மாலை பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாகர்கோவில் நாகராஜா கோவில் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Views: - 386

0

0